தமிழ்நாட்டில் அதிகமாகும் ஆன்லைன் வருமானம்

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைனில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள், அவை அனைத்துமே ஒரு சாதாரண மனிதனை உயர்ந்த இடத்திற்கு வாழ்க்கையை தகுதியை மாற்றக்கூடிய வல்லமை பெற்றதாக இருக்கிறது.

பெரும்பாலும், மாதம் முழுவதும் உழைப்பதை விட, மாதத்தில் சில நாள் உழைத்தாலே போதும் லட்சக்கணக்கில் வருமானம் என்ற அளவில் இந்த ஆன்லைன் வருமானம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதை பற்றி தெளிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் வலைதள கட்டுரையை கவனமாக படியுங்கள், யாருக்கு தெரியும் நீங்களும் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆன்லைன் வருமானத்தின் சிறப்பு

உதாரணமாக, நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாரல், அந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் நேரம், வேலை முடியும் நேரம் எனறு இருக்கும். நமக்கு மேல் அதிகாரிகள் என்று இருப்பார்கள், அவர்கள் நமக்கு கட்டளை இடுவார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்காக, நாம் மாதம் 30 நாட்களும் உழைப்போம்.

வருமானம் தரக்கூடிய தளங்கள்வேலையின் விவரம்
பேஸ்புக்வீடியோ பதிவேற்றம்
யூடியூப்வீடியோ பதிவேற்றம்
பிளாகர்இணையதள கட்டுரை எழுதுதல்
வேர்ட்பிரஸ்இணையதள கட்டுரை எழுதுதல்

ஒருவேளை, நாம் சொந்தமாக ஏதாவது வேலை செய்தாலும், அதாவது, விவசாயம் போன்ற தொழில் செய்தாலும் கூட மழைக்காலம், வெயில்காலம், போன்ற பருவ காலம் நிலை பொறுத்து நமது வருமானம் மாறக்கூடும்.

ஆகையால், அனைத்துமே ஒரு கட்டுப்பாடு உண்டு, ஆனால் இந்த ஆன்லைன் வருமானத்திற்கு கட்டுப்பாடே கிடையாது, நம்மை கட்டளை இடுவதற்கும் யாரும் கிடையாது, எந்த காலநிலை மாற்றம் வந்தாலும் வருமானத்தை நிறுத்தமுடியாது, இதுவே இதற்கு ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

நாம் நினைக்கும்போது வேலை செய்யலாம், எந்த ஒரு காலம் மாறும் போதும், அதாவது புயல் அடித்தாலும், மழை பெய்தாலும், நமது வருமானம் தடையில்லாமல் நமக்கு வந்து கொண்டிருக்கும் இதுவே இதன் முக்கிய சிறப்பம்சம்.

என்ன தகுதி வேண்டும்

இந்த காலகட்டத்தில் உலகம் முழுக்க பல சோசியல் மீடியா செயலிகள் வந்துவிட்டன, உதாரணமாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில் இருக்கின்றது. இவைகளில் உங்கள் கணக்கைத் தொடங்கி, உங்களுடைய திறமையை வீடியோவாக பதிவிட உங்களுக்கு எந்த ஒரு படிப்பு தகுதியும் தேவையில்லை.

அதோடு, இதில் எவ்வாறு வேலை செய்வது, எவ்வாறு வீடியோ பதிவேற்றுவது, எவ்வாறு வருமானம் ஈட்டுவது போன்றத் தகவல் தருவதற்காகவே பல வீடியோக்கள் இந்த தளங்களிலேயே வழங்கப்பட்டுள்ளது, அவைகளை பின்பற்றினாலே போதும், அவர்களைப் பின்பற்றி பலரும் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வருமானம் லட்சக்கணக்கில் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் திறமை இருந்தால் போதும், அது உலகத்தில் இருக்கும் அனைத்து நபர்களிடமும் கொண்டு செல்லும் அளவிற்கு தற்போது இணையதல உலகமாக மாறிவிட்டது இந்த காலகட்டம். ஆகையால், உங்கள் திறமையை நீங்கள் இலவசமாக வீடியோ தளங்களில் பதிவேற்ற முடியும்.

அங்கு கிடைக்கும் வருமான வாய்ப்பை பயன்படுத்தி ,உங்கள் விடியோ களுக்கு விளம்பரம் பெற முடியும் அந்த விளம்பரத்தின் மூலம் நீங்கள் அதிக வருமானத்தை ஈட்டலாம். சில இணைய தளம் உருவாக்கி வருமானத்தை ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும், அதையும் நீங்கள் செய்ய முடியும், அனைத்து மொழியையும் ஆதரிக்கும் அப்ளிகேஷன்கள் பல உள்ளன.

முதலீடு என்ன

இந்த காலகட்டத்தில் நம் அனைவரிடமும் குறைந்த பட்சம் 5 ஆயிரத்திற்கு மதிப்புடைய ஒரு மொபைல் போன் இருக்கிறது. இந்த மொபைல் போனை கொண்டு நீங்கள் உங்கள் முதல் ஆன்லைன் வருமானத்திற்கு உழைக்க முடியும். உதாரணமாக, தற்போது அனைவருமே மொபைல் வைத்திருந்தால், அதற்கு இன்டர்நெட் பேக் நிச்சயம் செலவு செய்து, மாதாமாதம் ரிசார்ட் செய்கிறார்கள், அதில் பலர் பொழுதுபோக்குக்காக ஃபேஸ்புக், யூ டியூப், போன்ற தளங்களில் வீடியோவை பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால், இதில் இருக்கும் வருமான வாய்ப்பை உணர்ந்தவர்கள் பலரும், பிறர் பார்ப்பதற்காக வீடியோவை பதிவேற்றி கொண்டிருக்கிறார்கள். இதில் வீடியோவை பதிவேற்றம் செய்பவர் வருமானம் ஈட்டும் இடத்தில உள்ளார், வீடியோவை பார்க்கும் இடத்தில உள்ளவர் பணத்தை செலவு செய்பவராகவும், நேரத்தையும் செலவு செய்வதாகவும் இருக்கிறார்கள். நீங்கள் இதில் எந்த ரகமாக இருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் வருமானத்திற்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி.

உதாரணமாக, ஒரு மொபைலை கொண்டே நீங்கள் யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியும், பேஸ்புக்கில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியும். தற்போது இந்த விஷயத்தை நாம் பார்க்கப்போனால், சில வருடங்களுக்கு முன்பே ஜியோ இலவசமாக அனைவரும் இண்டர்நெட் சேவையை வழங்கியது, அப்போது பலரும் இலவசமாக உபயோகப்படுத்தும் போது அதை சற்று யோசித்து பயன்படுத்திநார்கள், அதில் யூடியூபில், பேஸ்புக்கில் வீடியோ பதிவேற்றுவது செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு அப்பொழுதே அவர்களுக்கான ஒரு நிரந்தர ஆன்லைன் வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

உங்களால் முடியுமா

தற்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, நீங்கள் இலவச பிளாக்கர் இணைய தளத்தில், உங்கள் வலைதளத்தை உருவாக்கி வருமானம் ஈட்ட முடியும். மேலும் பேஸ்புக், யூடியூப் போன்ற தளத்தில் உங்கள் பதிவேற்றி ஆன்லைன் வருமானம் பெற முடியும், இதற்கான வாய்ப்பு எப்போதும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். உங்களின் நேரத்தை செலவழித்து, ஒரு நிரந்தர ஆன்லைன் வருமானத்தை உருவாக்க பாடுபடுங்கள். இவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள பல யூடியூப் சேனல்கள் உள்ளன அவற்றை நீங்கள் அணுக முடியும்.

நாங்கள் வழங்கிய இந்த தகவல் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிரலாம், விரைவில் பதில் அளிப்போம்.

ESI Chennai HomeESI Home

Leave a Reply