என் மரணத்திற்கு அஜித் தான் காரணம் [வைரல் வீடியோ!]

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இருக்கும், அஜீத் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஃபர்சானா என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது தீக்குளிக்கச் சென்ற அந்த பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்து காவல் நிலையம் கூட்டி சென்றனர். இது பற்றி கூடுதல் தகவலுக்கு எங்கள் கட்டுரையை கவனமாக படியுங்கள்.

Woman tried to put fire on herself in front of actor Ajith house Viral Video Tamil News

தீக்குளிக்க முயற்சி

சமீபத்தில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அவர் மீது தண்ணீர் ஊற்றி பிறகு, அவரை கைதும் செய்தனர்.

இந்தநிலையில், தீக்குளிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மரணத்திற்கு அஜித் காரணம்

தற்போது, அந்த வீடியோவில், அந்த பெண், “என் மரணத்திற்கு அஜித் தான் காரணம்” என்று கூறுவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் குறிப்பிடப்படும் அந்தப் வேலையை இழந்த பெண், சென்னையின் பிரபல மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் ஃபர்சானா ஆவர்.

இவர் இதற்க்கு முன்னதாக அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அவர் தனது வேலையை இழந்ததாகக் குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபர்சானா விசாரணையில் உள்ளார் என்கிற தகவல் முதல் கட்டமாக வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ

Leave a Reply