பிரசார் பாரதி புதிய இரண்டு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, இந்த இரண்டு வேலை வாய்ப்புகளுக்கு 3 காலி பணியிடங்கள் உள்ளது. மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ், மல்டிமீடியா ஜேர்ணலிஸ்ட் என்ற காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் Marketing Executive என்ற வேலைக்கு 2 காலி பணியிடங்களும், Multi-Media Journalist (MMJ) என்ற பதவிக்கு 1 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது, அதுமட்டுமில்லாமல் இது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ஒரு வேலையாகும்.
இந்த Prasarbharathi வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்கள் அனைத்தையும் தெளிவாக காணலாம் வாருங்கள்:
நிறுவனம் | பிரசார்பாரதி |
பணி | Marketing Executive – 2, Multi-Media Journalist (MMJ) – 1 |
கடைசி தேதி | அறிவிப்பு வந்த நாளிலிருந்து 15 நாட்கள் |
விண்ணப்ப முறை | Online |
பணியின் பெயர் | Marketing Executive, Multi-Media Journalist (MMJ) |
Prasarbharathi வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி என்ன?
இந்த இரு வேலை வாய்ப்புகளுக்கும் இரு வெவ்வேறு கல்வித்தகுதி கேட்கப்பட்டுள்ளது, இதில் Multi-Media Journalist (MMJ) வேலைக்கு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும், Marketing Executive என்ற வேலைவாய்ப்புக்கு மேலாண்ம நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ மார்க்கெட்டிங் அல்லது எம்பிஏ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSB வங்கி Manager பணி 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Prasarbharathi வேலைக்கு ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தை பொறுத்த அளவு 35,000/- ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, வருங்காலத்தில் உங்கள் வேலையின் திறமையைப் பொருத்து இது நீட்டிக்கப்படலாம். கூடுதல் தகுதி, விண்ணப்பங்களையும், அறிவிப்பையும் கீழே கொடுத்துள்ளோம், தெளிவாகப் பாருங்கள்.
Marketing Executive & (MMJ) வேலைக்கான வயது:
வயது வரம்பை பொருத்தவரை 24 வயது முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அது சார்ந்த விவரங்களை தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக காணமுடியும், அந்த அறிவிப்பை எங்கள் வலைதளம் மூலம் நீங்கள் அணுக முடியும்.
வேலைக்கு தேர்வு முறை எப்படி?
இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த வரை உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் என்றால் உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது ஆவண சரிபார்ப்பு, விண்ணப்பதாரர் தேர்வு, நேர்காணல் போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
இந்த Prasarbharathi வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு முன்னர் எந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்பதை உங்கள் கல்வித்தகுதியை அடிப்படையைக் கொண்டு நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பிக்கும் வலைதளம் போன்றவற்றை அணுகுங்கள், அங்கு உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுப்புங்கள்.
அப்போது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற விஷயத்தை சரியான முறையில் கொடுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும்.
A person with more than 5 years of experience in the field of news, a very talented writer