சென்னை-கோயம்புத்தூர் விமான கட்டணம் 3100 பேருந்து கட்டணம் 2,800

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தீபாவளிப் பண்டிகை வருவதால் தமிழக அரசு பல சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது, இருந்தபோதும் ஞாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணத்தை வசூலிக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள்வழிவகை செய்ய வேண்டும் என்று திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.

ஆயுத பூஜை

buses should not charge more on festive days O panneerselvam

அந்த அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகையிலேயே நீண்ட விடுமுறை நாட்களைக் கொண்டப்படும் பண்டிகை ஆயுத பூஜை, அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14ம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாதுன் நபி பண்டிகை என்பதாலும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியூர் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

பண்டிகைஅரசு விடுமுறை தேதி
ஆயுத பூஜைஅக்டோபர் 14
விஜயதசமிஅக்டோபர் 15
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைபொது விடுமுறை
மிலாதுன் நபிஅக்டோபர் 19

தற்போது ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் துவங்க பட்டதால், வெளியூர்களில் தங்கி படிக்கும் குழந்தைகளும் இந்த விடுமுறை தினங்களில் பெற்றோர்களை சந்திக்க வருவதுண்டு, ஆகையால் இந்த தினங்களில் நிச்சயம் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

3,000 பேருந்துகள்

மேற்படி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, வெளியூர்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிபவர்கள் கிராமங்களை நோக்கி செல்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை முன்னிட்டு, பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக, பல்வேறு பகுதிகளுக்கு தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 3,000 பேருந்துகள் இயக்க இருப்பதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் 2,800

இதேபோன்று தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில் இயக்குகின்றன. இவ்வாறு தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், குறிப்பாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை-கோயம்புத்தூர் வழித்தடத்திற்க்கான கட்டணம் 2,800 ரூபாய் வரை வசூலிக்க படுவதாகவும், கிட்டத்தட்ட 1500 பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் ஏற்படுவதாகவும் சென்னை கோயம்புத்தூர் விமான கட்டணம் 3100 என்கிற என்கின்ற நிலையில் பேருந்து கட்டணம் 2,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும் விமான கட்டணத்தில் தனியார் பேருந்து கட்டணம் உள்ள வித்தியாசம் 300 ரூபாய் என்றும், அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்படும் எந்தவித மாற்றமும் எடுக்கப்படவில்லை என்றும், விதிமீறல்களை தொடர்ந்து நடப்பதாகவும் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிப்பதாக இன்று பத்திரிக்கை செய்திகள் வருகின்றன.

உத்தரவிட வேண்டும்

பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த நிலை என்றால், பண்டிகைக்கு முன் தினத்தை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியாது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலுக்கு இடையில், 10 மணி நேரம், 12 மணி நேரம் பயணிக்க கூடிய பேருந்துகளில் விமான பயணத்திற்கு இணையான கட்டணம் வசூலிப்பது என்பதும், சம்பிரதாயத்திற்காக எச்சரிக்கை விடுத்துவிட்டு இதனை அரசு கண்டும் காணாமல் இருப்பது என்பதும் கண்டிக்கத்தக்கது. இதில் ஆளும் கட்சியினரும் தனியார் பேருந்துகளுக்கு ரகசிய தொடர்பு இருக்கிறது என்று பொதுமக்கள் என்ன கூடிய அளவிற்கு கட்டணம் உயர்வு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகை செய்ய காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று திரு பன்னீர்செல்வம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் முழு தகவலை நீங்கள் அவர் தனது ட்விட்டர் தளத்தில் தெரிந்து கொள்ளலாம் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ட்விட்டர்@OfficeOfOPS
ESI Chennai HomeESIC Home

Leave a Reply