இந்தியன் 2 பட நடிகர் திடீர் மரணம்

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

கமலின் இந்தியன் திரைப்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த, பிரபல கேரள நடிகர் நெடுமுடி வேணு அவர்கள் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் காலமானார். மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருந்தாலும், தமிழில் முக்கிய படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். அதனால் இவரை அனைவருக்குமே ஒரு குணச்சித்திர நடிகராக தெரியும்.

முதலில் பத்திரிகையாளராக

Nedumudi Venu died without treatment

முதலில் பத்திரிக்கையாளராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார், நெடுமுடி வேணு என்று அழைக்கப்படும் இவர், 1978ஆம் ஆண்டு முதல்முறையாக திரைத்துறையில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதற்கு முன்னர் இவர் பல நாடகங்களிலும் நடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கேசவன் வேணுகோபால் என்கின்ற இவரது பெயரை, நடிப்புக்காக மாற்றிக் கொண்டார், அவரது பெற்றோரின் சொந்த ஊரே நெடுமுடி ஆகும். மேலும் மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகரின் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வந்தார், பல குணச்சித்திர வேடங்களில் நடித்து எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார், கேரளாவை தாண்டி இந்தியா முழுவதிலும் திரைக்கலைஞர்கள் இடையே நெடுமுடி வேணு அவர்களுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது என்றே கூறலாம்.

500 திரைப்படங்ள் மூன்று தேசிய விருது

இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 2003ஆம் ஆண்டு, ‘மார்க்கம்’ திரைப்படத்துக்காக, சிறப்பு நடுவர் தேர்வாக தேசிய விருதை வென்றார். 2006ஆம் ஆண்டு திரைப்படம் அல்லாத படைப்பில் வர்ணனை செய்ததற்காக தேசிய விருது வென்றார், அதோடு, 1990ஆம் ஆண்டு ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். இவை தவிர 6 முறை கேரள மாநில விருதுகள், 3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

கோவிட் காரணமாக

இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருந்தார் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் நெடுமுடி வேணு அவர்களுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த அவருக்கு, அங்கு இன்று மதியம் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அப்போது நெடுமுடி வேணு அவர்களின் உயிர் பரிதாபமாக பிரிந்தது ஆக கூறப்படுகிறது அவருக்கு வயது 73.

திங்கட்கிழமை காலை நெடுமுடி வேணு கவலைக்கிடம் என்ற தகவலை மருத்துவர்கள் பகிர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானது மலையாளத் திரை ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு அவர் இறந்த செய்தி அறிந்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

டுவிட்டர் மூலம் பிரபலங்கள்

இவரின் மரணச் செய்தியைக் கேட்டு, தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை டுவிட்டர் மூலம் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் இவரைப் பற்றி கூறும்போது, நடிப்பில் அவருடைய திறமை எவ்வாறு இருக்கும் என்பதையும், அவரோடு திரையுலக பிரபலங்கள் பழகிய நாட்களையும் நினைவுகூர்ந்து, தங்கள் பதிவை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இடும் பதிவுகள் பற்றிய தகவல்களை சில உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம்.

நடிகர் சூர்யா ட்விட்டவெர் பதிவு@Suriya_offl
நடிகர் சித்தார்த் ட்விட்டவெர் பதிவு@Actor_Siddharth
நடிகர் சரத்குமார் ட்விட்டவெர் பதிவு@realsarathkumar
நடிகர் கார்த்தி ட்விட்டவெர் பதிவு@Karthi_Offl

Leave a Reply