9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எப்படி

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தற்போது நடந்து முடிந்துள்ள ஊராட்சி தேர்தலானது, 9 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது, இந்த மாவட்டங்களின் விவரங்கள், இதில் எவ்வாறு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தன. 6-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின, 2-ம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணிக்கு இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகின்றன.

9 மாவட்டங்கள்

How the results of 9 district local body elections in Tamil Nadu will be announced

இந்த 9 மாவட்டங்களிலும் பழைய வாக்கு முறைப்படியே தேர்தல் நடத்தப்பட்டது, 4 பதவிகளுக்கும் நான்கு தனித்தனி வண்ணத்தில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அவைகளை ஒரே பேட்டியில் வாக்கு செலுத்தி மக்கள் பதிவிட்டவர். இவை அனைத்துமே தற்போது வண்ணம் வாரியாக தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பின்னர் அந்தந்த ஊராட்சி மேசைக்கு சென்று முறைப்படி இந்த வாக்குகள் எண்ணப்படுகின்றன, அந்த மாவட்டங்களில் விவரங்களையும் எங்களுக்கு காணலாம்.

உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்கள்
ராணிப்பேட்டை
திருநெல்வேலி
கள்ளக்குறிச்சி
திருப்பத்தூர்
தென்காசி
விழுப்புரம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
வேலூர்

நான்கு வண்ண வாக்கு சீட்டுகள்

இந்த வாக்கை எண்ணிக்கையானது காலையில் தொடங்கிவிட்டது, இதில் நான்கு நிற வாக்கு சீட்டுகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். முதலில் இந்த பெட்டிகள் அனைத்தும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் திறக்கப்படும், பின்னர் மற்றொரு பெட்டியில் செலுத்தப்படும், அதன்பிறகு, அதில் இருக்கும் நான்கு வண்ண சீட்டுகளையும் தனித்தனியாக பிரித்து எடுப்பார்கள், பிரித்து எடுத்த அனைத்து சீட்டும் தனித்தனியாக அடுக்கப்படும், இந்த நான்கு பதவிகளுக்கான சீட்டின் வண்ணங்களையும் நீங்கள் கீழே காணமுடியும்.

பதவியின் பெயர்வாக்கு சீட்டு வண்ணம்
பஞ்சாயத்து உறுப்பினர்மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டு
ஒன்றிய உறுப்பினர்பச்சை நிற சீட்டு
பஞ்சாயத்து தலைவர்இளம் சிவப்பு நிற சீட்டு
பஞ்சாயத்து உறுப்பினர்வெள்ளை நிற சீட்டு

நான்கு பதிவுகளுக்கான வாக்குகளை எண்ணுவதற்கும், தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, இந்த அறையில் 4 பதவிகளுக்கான ஓட்டுகளையும் தனித்தனியாக, பதவிகள் வாரியாக பிரித்து வைக்கப்படும். கிடைத்த ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும், ஒவ்வொரு கட்டுகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் யாருக்கு ஓட்டு விழுந்துள்ளது என்கிறது விவரங்களை பார்த்து, அவைகளை வேட்பாளர் வாரியாக அடுக்கி வைக்கப்படும்.

வெற்றி பெற்றவர்கள்

அனைத்து பதிவுகளுக்கும் அதிக அளவு ஓட்டுகள் விழுந்துள்ளன, சுமார் ஒரு லட்சம் ஓட்டுகளில் இருந்து இருந்து ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வரை பதிவாகி உள்ளதாக தெரிய வருகிறது. ஆகையால், இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கவே நிறைய நேரம் எடுத்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், உறுப்பினர் பதவிகளுக்கும் ஆயிரக்கணக்கில் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது, இந்த இரண்டு பதவிகளுக்கான ஓட்டுகள் எண்ணி முடிப்பதற்கு நாளை வரை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதும், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கான குறைந்த எண்ணிக்கையிலேயே ஓட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது, ஆகையால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த முடிவுகள் தெரிய வரும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது காலை 10 மணிக்கெல்லாம் ஊராட்சி உறுப்பினர் பதவி வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது, அடுத்த ஒரு மணி நேரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை வெற்றி பெற்றவர்கள் விவரங்களும் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஆனது உடனுக்குடன் அந்தந்த அறை மேற்பார்வையாளர் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், அவர் வட்டார பார்வையாளர்களிடம் இந்த தகவலை வழங்குவார், அந்த விவரங்கள் ஆனது அனைத்தும் மாவட்ட பார்வையாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் சென்றடையும்., அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும், அந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார பார்வையாளர்கள் ஒப்புதலுடன், வெற்றி தோல்வி விவரங்களை மையங்கள் மூலம் அறிவிக்கப்படும். இந்த நடவடிக்கை அனைத்துமே நேர்மையான முறையில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply