தமிழகத்தில் ⛈ அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆறு மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது, அதோடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை பெய்த மழையின் அளவு என்ன, வரப்போகும் மூன்று நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யக் கூடும் என்ற தகவல் உங்களுக்காக தெளிவாக வழங்கப்பட்டுள்ளது, இதை தெரிந்து கொள்ள எங்கள் இணைய தளக் கட்டுரையை கவனமாக படியுங்கள்.

Heavy rain for the next 3 days in Tamil Nadu, weather center information

தென்மேற்குப் பருவமழை தீவிரம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய காரணத்தினால், சில மாவட்டங்களில் அதிக கனமழையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுபற்றிய தெளிவான தகவல்களை நீங்கள் இங்கே காணலாம். கனமழை பெய்யக்கூடும் மாவட்டங்களில் பட்டியலும், அதிக கனமழை பெய்யக்கூடும் என்று மாவட்டங்களில் பட்டியலையும் நீங்கள் கீழே காணமுடியும்.

அறிவிப்பு தேதி05/10/2021
மழைக்கான தேதி06/10/2021, 07/10/2021, 08/10/2021
தொலைபேசி044- 28271951
அதிகாரபூர்வ இணையத்தளம்imdchennai.gov.in

கனமழை

 • அரியலூர்
 • பெரம்பலூர்
 • கள்ளக்குறிச்சி
 • சேலம்
 • திருவண்ணாமலை
 • கடலூர்

அதிக கனமழை

 • காஞ்சிபுரம்
 • செங்கல்பட்டு
 • திருவள்ளூர்
 • ராணிப்பேட்டை
 • புதுக்கோட்டை
 • நீலகிரி
 • கோயம்புத்தூர்
 • தேனி
 • திண்டுக்கல்
 • நாமக்கல்

மேலே குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் அனைத்திலும், கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்

வானிலை மையம் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை என்று அறிவித்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது என்பதை வானிலை மையம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது, அது பற்றிய கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

சென்னை புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. மேலும், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், டெல்டா மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கடந்த 24 மணிநேரத்தில் மழை [சென்டி மீட்டர்]

அதிலும் குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவான மாவட்டங்களின் விவரங்களை தெளிவாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதில் பெரும்பாலும் நிறைய மாவட்டங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது, அந்த மாவட்டங்களின் பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவான மாவட்டங்கள்

 • சத்தியமங்கலம் (ஈரோடு
 • சித்தார் (கன்னியாகுமரி)
 • பேச்சிப்பாறை (கன்னியாகுமரி)
 • புழல் (திருவள்ளூர்)
 • பொள்ளாச்சி (கோவை)
 • திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி)
 • திருபுவனம் (சிவகங்கை)
 • பெரியாறு (தேனி)
 • ஊத்துக்குளி (திருப்பூர்)
 • எமெரால்ட் (நீலகிரி)
 • பரங்கிப்பேட்டை (கடலூர்)
 • தீர்த்தாண்டதானாம் (ராமநாதபுரம்)
 • அண்ணா பல்கலை (சென்னை)
 • சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு)

தலா 1 செம.மீ அளவில் மழை பதிவான மாவட்டங்கள்

 • அயனாவரம் (சென்னை)
 • நுங்கம்பாக்கம் (சென்னை)
 • சென்னை விமான நிலையம்
 • மேட்டுப்பட்டி (மதுரை)
 • கடம்பூர் (தூத்துக்குடி)
 • மீமிசல் (புதுக்கோட்டை)
 • காட்பாடி (வேலூர்)
 • பாபநாசம் (திருநெல்வேலி)
 • பரமத்திவேலூர் (நாமக்கல்)
 • காஞ்சிபுரம், திருவாரூர் பாடாலூர் (பெரம்பலூர்)
 • வேங்கூர் (கள்ளக்குறிச்சி)
 • வீரகனூர் (சேலம்)
 • ஆயிக்குடி (தென்காசி)
 • மயிலாடுதுறை, காரியாபட்டி (விருதுநகர்)
 • மகாபலிபுரம் (செங்கல்பட்டு)

அக்டோபர் 6,7,8 மூன்று தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் ஆனது அக்டோபர் 6,7,8 மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் வெளி மண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

6ஆம் தேதியன்று: நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை முதல் அதிக மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி: வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் லேசான மழை முதல் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

மூன்றாவது நாளான அக்டோபர் 8 ஆம்: தேதி என்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கடலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 9ஆம் தேதியன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்

சில முக்கிய இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது, குறிப்பிட்ட இடங்களில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதற்காக இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது, அதைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் காண்போம் வாருங்கள்.

குறிப்பாக, இன்று தமிழக கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், அக்டோபர் 8ம் தேதியன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வ செய்திtamilrain
ESI Chennai HomeESI Home

Leave a Reply