கூகுள் அட்சன்ஸ் பயன்படுத்துபவரா… புதிய அறிவிப்பு

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

உலகம் முழுக்க தங்களது பார்ட்னர்கள் கொண்ட கூகுள் அட்சன்ஸ், ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இந்த அறிவிப்பானது கூகுள் அட்சென்ஸ் ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் ஜிமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது, இதில் பல முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தகவல் பற்றிய தெளிவான விவரங்களை தெரிந்து கொள்ள எங்கள் இணையத்தள கட்டுரை கவனமாகப் படியுங்கள்.

இருப்பினும், கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நீங்கள் இதைப் பார்வையிட முடியும், ஆனால், எளிமையாக தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்கும் நோக்கத்தில் இந்த இணையதள கட்டுரையை நாங்கள் எழுதியுள்ளோம். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம், வாருங்கள் தொடர்ந்து காணலாம்.

அட்சென்ஸ் ecosystem

Evolving the AdSense ecosystem in tamil

கூகுள் அட்சென்ஸ் என்பது, நாம் வருமானம் ஈட்டுவதற்காக ஒரு வாய்ப்பு, இதில் உங்கள் youtube வீடியோக்கள் மற்றும் உங்களுடைய இணைய தளத்திற்கு விளம்பர ஒப்புதல் பெற்று, விளம்பரத்தை நீங்கள் காண்பித்து அதில் வருமானம் ஈட்ட முடியும்.

அட்சன்ஸ்Evolving the AdSense ecosystem
பார்ட்னர் அறிவிப்புவிளம்பரதாரர் பங்குதாரர்களுக்கு உதவ
கூடுதல் தகவல்AdSense first-price auction help page

ஆனால், கூகுள் Adword என்பது கூகிளில் தங்களது விளம்பரத்தை காண்பிக்க நினைக்கும் விளம்பரதாரர்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்து, யூடியூப் சேனல் மற்றும் இணையதளங்களில் தங்கள் வியாபாரத்தை விளம்பரம் மூலமாக கொண்டு செல்ல நினைப்பார்கள். அப்படி நினைக்கும், விளம்பரதாரர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கட்டணத்தை கூகுள் நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணம் தற்போது இரண்டாவது நிலையில் இருக்கிறது, முதல் நிலைக்கு நகர்த்துவதாக கூகுள் முடிவு செய்திருக்கிறது.

அவ்வாறு முடிவு செய்யும்போது, விளம்பரத்தை கூகுள் பெற்றாலும், அந்த விளம்பரம் தங்களது ஆட்சென்ஸ் பார்ட்னர் மூலமாகவே மற்றவர்களுக்கு சென்றடைவதை உணர்ந்த கூகுள், இந்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தே இந்த ஜிமெயிலை (Evolving the AdSense ecosystem: Our move to a first-price auction) கூகுள் ஆட்சென்ஸ் உபயோகப்படுத்தும் அனைவருக்கும் அனுப்பியுள்ளது. நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் உபயோகப்படுத்தி இருந்தால் உங்களுக்கும் இந்த ஈமெயில் வந்திருக்கும்.

இதனால் வருமானம் பாதிக்குமா?

தங்களது ஏலத்தை ஏலத்தை இரண்டாவது விலையிலிருந்து முதல் விலைக்கு நகர்த்தியபோதும், அட்சென்ஸ் மூலம் வருமானம் ஈட்டி கொண்டிருக்கும் யாருக்கும் வருவாயில் எந்த ஒரு மாற்றத்தையும் காண மாட்டார்கள் என்று கூறியுள்ளது. அதாவது, ஏலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாற்றுவதற்கு முன் எங்கள் விளம்பரதாரர் பங்குதாரர்களுக்கு உதவ இந்த அறிவிப்பை இப்போது வெளியிடுகிறோம் என்று அந்த மெயில் மூலம் அனைவருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளது அட்வான்ஸ்.

இந்த எஏலத்திற்கான மாற்றம் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என்றும், மேலும் எதிர்கால தகவல்களுக்கு AdSense முதல் விலை ஏல உதவி பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சென்ஸ் பார்ப்பனர்களுக்கு இந்த தகவலை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், நாங்கள் எந்த ஒரு மாற்றத்தை செய்தபோதும், அதை உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தங்கள் கருத்தை தெரிவித்துள்ளது கூகுள் அட்சென்ஸ்.

ஆட்சென்ஸ் பங்குதாரர் என்ன செய்ய வேண்டும்?

இந்த விஷயத்தில் அட்சென்ஸ் உபயோகப்படுத்தும் நபர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இது உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வந்த சின்ன செய்தி மட்டுமே, நீங்கள் எப்போதும் போல கூகுள் அட்சன்ஸ் இன் விதிகளை பின்பற்றி வேலையை தொடரலாம்.

உதாரணமாக, Youtube சேனல், இணைய தளங்கள் போன்றவற்றை எப்போதும் போல நடத்திவரலாம், எப்போதும் போல் உங்களுடைய வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கொண்டே இருக்கும். இந்த செய்தியை நினைத்து அதிக அளவு யோசிக்க தேவை இருக்காது, ஆகையால் நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்தலாம். அனைத்தையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் கூகுள் ஆட்சென்ஸ் டீம், எதிர்காலத்திலும் நல்ல சேவையை உங்களுக்கு வழங்கும்.

நாங்கள் அளித்த இந்த தகவல் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என்று நினைக்கிறோம், மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களுடன் பகிரலாம், விரைவில் உங்களுக்கு பதில் அளிப்போம், உங்கள் கருத்துக்கும் காத்திருக்கிறோம். வருங்கால நல்ல தகவல்களுக்காக எங்கள் இணையதளத்தை புக்மார்க் செய்ய உங்களிடம் பரிந்துரைக்கிறோம்.

Evolving the AdSenseThis announcement
ESI Chennai HomeESI Home

Leave a Reply