தமிழ்நாடு: தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில், பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் தற்போது வெளியாகி உள்ள இந்த அரசு வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் 21/11/2022-க்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணி | 1 |
கடைசி தேதி | 21/11/2022 |
விண்ணப்ப முறை | Offiline |
பணியின் பெயர் | சமூகப்பணியாளர் |
குழந்தைகள் பாதுகாப்பு காலிபணியிடங்கள்:
சோசியல் ஒர்க்கர் என அழைக்கக் கூடிய இந்த சமூக பணியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் மட்டும் தற்போது காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை 2022 – சம்பளம்: ரூ.15,000/- || தேர்வு கிடையாது!
இதற்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே 40 வயதிற்கும் மிகையாகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வயது தளர்வு, கூடுதல் விவரங்கள் போன்றவற்றை அதிகாரபூ
ர்வ அறிவிப்பின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இந்த பணிக்காக தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் 18,536/- சம்பளம் வழங்கப்பட உள்ளது, எனவே இது சம்பந்தமான விவரங்களை தெரிந்து கொண்டு நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், அதற்கான கல்வித் தகுதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இந்த சோசியல் ஒர்க்கர் சமூக பணியாளர் வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை பட்டதாரி (10+2+3 மாதிரி) சமூகப்பணி 7 சமூகவியல் / சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும், அதே சமயம் இப்பணியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், மேலும் கணினி அடிப்படையில் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசு வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த கட்டுரையில் நாம் பார்த்தால் வேலைக்கு தகுதியானவர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து 21/11/2022 அன்று மாலை 5:45 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பவேண்டும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதற்கான விண்ணப்ப படிவத்தை கிழே பெற்று கொள்ளுங்கள்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
A person with more than 5 years of experience in the field of news, a very talented writer