2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் ஆய்வு இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதாகவும், இது சம்பந்தமான ஒப்புதல் என்னும் பெறவில்லை என்றும் மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், குழந்தைக்காக தடுப்பூசி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையமான இன்னும் ஒப்புதல் தரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2 வயது முதல் 18 வயது

Corona vaccine study of 2 to 18-year-olds

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகத் தீவிரம் காட்டி வருகிறது இந்திய அரசாங்கம், இதில் தற்போது நீங்கள் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்கள் உங்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்ய முடியும். மேலும் 12 வயது முதல் 18 வயது உடைய சிரியவர்களுக்கான தடுப்பூசி பற்றியும் அது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்கள் பற்றியும் அரசு தனது அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த வகையில் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு நிபுணர் குழுவால் சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2 வயது முதல் 18 வயது வரை உடையவர்களுக்கான தடுப்பூசி கான ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆய்வின் முடிவு இன்னும் தெரிவிக்காத நிலையில், இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் கூடுதல் நாள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி பதிவு செய்து

அடுத்து, இந்த தடுப்பூசியை மக்கள் சுலபமாக பெரும் வழியை அறிமுகப்படுத்திய அரசு, உங்களுக்கான தடுப்பூசியை நீங்கள் உங்கள் டெலிகிராம் அப்ளிகேஷன் மற்றும் Paytm அப்ளிகேஷன் மூலம் பெற முடியும், நீங்கள் வீட்டிலிருந்தே உங்களுக்கான தடுப்பூசி பதிவு செய்து, உங்கள் அருகிலுள்ள கொரோனா மையத்திற்கு சென்று உங்களுக்கான தடுப்பு செலுத்திக் கொள்ளலாம். இதில் சரியான வயது மற்றும் முக்கியதகவல்களை இணைக்கவேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பக்கவிளைவுகள்

இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் வருவதாகவும் கூறப்படுகிறது, அதாவது, மயக்கம், சோர்வு, இருதய படபடப்பு, லேசான காய்ச்சல், போன்றவற்றை அடங்கும். இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டாள் ஒருநாள் நல்ல ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கீழே கொடுக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றி நாம் இந்த கொரோனா வைரஸிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காத்திடுவோம்.

Official SiteClick Here
ESI Chennai HomeESI Home

Leave a Reply