10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தமிழகத்தின் முக்கிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது, இந்த மழையானது தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவு பெறுவதற்காகவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை பற்றி கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள எங்கள் இந்த கட்டுரையை கவனமாக படியுங்கள், இதில் புயல் காற்று வீசும் நேரம், 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடிய நிலவரம், மேலும் நீலகிரி, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் வரும் இரு தினங்களுக்கு பெய்யக்கூடிய மழை நிலவரம் போன்ற அனைத்தையும் வழங்க உள்ளோம், இதில் சென்னையில் பெய்த மழையும் நிலவரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை மையம்

Chennai Meteorological Department has forecast heavy rains in 10 districts for the next two days

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அல்லது அறிக்கையை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையின் தெளிவான விளக்கத்தை நீங்கள் கீழே காணலாம், இதில் இதற்கு முன்னர் பெய்த மழையின் நிலவரமும், வரக்கூடிய கனமழை நிலவரத்தையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

அறிவிப்பு தேதி10/10/2021
மழைக்கான தேதி11/10/2021, 12/10/2021
தொலைபேசி044- 28271951
அதிகாரபூர்வ இணையத்தளம்imdchennai.gov.in

வெளி மண்டல சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை பதிவு மாவட்டங்களில் நிலவரங்களை பார்க்கலாம், அதாவது, மாவட்டங்களில் 10 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ள மாவட்டங்களின் பட்டியலாகும்.

கடந்த 24 மணி நேரத்தில்

மாவட்டங்கள்மழை பதிவு
பெரம்பலூர் மாவட்டம் சீகூர்10 செமீ
கரூர்10 செமீ
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்10 செமீ

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த பட்ச காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது, அதனால் வரும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு தினங்களுக்கு

வரும் 11/10/2021 மற்றும் 12/10/2021 அன்று வானிலை மையத்தின் ஆய்வுப்படி, கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறது. இதில் 11 ஆம் தேதி பெய்யக்கூடிய மழை நிலவரமும், 12ம் தேதி பெய்யக்கூடிய கன மழை பெய்யக்கூடிய மாவட்ட நிலவரத்தையும் உங்களால் கீழே காண முடியும்.

அதிக மழை பெய்ய வாய்ப்பு

11/10/2021 மழை நிலவரம்
நீலகிரி
கோவை
சேலம்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
டெல்டா மாவட்டங்களில்
12/10/2021 மழை நிலவரம்
நீலகிரி
கோவை
ஈரோடு
சேலம்
விழுப்புரம்
தர்மபுரி
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு

சென்னையில் வானிலை மையத்தின் ஆய்வு தகவலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம், வரும் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு எங்கள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்படுகிறது.

அதிகாரபூர்வ செய்திtamilrain
ESI Chennai HomeESI Home

Leave a Reply