தமிழ்நாட்டில் வரும் 11-ஆம் தேதி வரை மழை

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

தமிழ்நாட்டில் சில மாதங்களாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வர துவங்கியுள்ளது, அதை தொடர்ந்து வட கிழக்கு பருவமழை காலம் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களாக இந்த வட கிழக்கு பருவமழை ஆனது பல மாவட்டங்களில் நிறைய அளவு பதிவாகி உள்ளது.

வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டைப் பொருத்தவரை பருவமழை பல மாவட்டங்களில் அதிக அளவு பெய்து வருகிறது. இன்று தொடங்கி வரும் 11ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதற்கு முன்னர் பெய்த மழையும், வரும் 11-ஆம் தேதி வரை பெய்யக்கூடிய மழையின் விவரத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள எங்கள் இணையதள கட்டுரை கவனமாக படியுங்கள்.

கடந்த 24 மணிநேரத்தில்

Announcement by the Director of the Rainy Meteorological Center Puviarasan till the 11th in Tamil Nadu

வரக்கூடிய தினங்களில் பெய்யக்கூடிய மழையின் விபரங்களை நீங்கள் அறிய ஆர்வமாக இருப்பதை நாங்கள் அறிவோம், ஆகையால் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் வெளியிட்ட தகவலை தெளிவாக உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம். மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கும்.

அறிவிப்பு தேதி07/10/2021
மழைக்கான தேதி08/10/2021, 09/10/2021, 10/10/2021, 11/10/2021
தொலைபேசி044- 28271951
அதிகாரபூர்வ இணையத்தளம்imdchennai.gov.in

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது, இவை அனைத்தும் லிட்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது, இது பற்றிய கூடுதல் தகவலை சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்து என்பதற்கான விவரங்கள் உங்களுக்காக கீழே.

மாவட்டங்கள்மழை பதிவு
திருச்சியில்9 செமீ
தேவாலா, பந்தலூரில்8 செமீ
சோலையாறு, சென்னை, திருவாடானையில்4 செமீ
மகாபலிபுரம், பள்ளிப்பட்டு, ஓசூரில்3 செமீ
உசிலம்பட்டி, மதுரை, தேனியில்2 செமீ
ஆம்பூர், திருப்பூர், கிருஷ்ணகிரியில்1 செமீ

வரும் ஐந்து நாட்களுக்கு மழை

இன்று முதல் வரும் ஐந்து நாட்களுக்கு அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் அவர் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஐந்து நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழையும், அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிதமான மழை பெய்யக்கூடிய மாவட்டத்தையும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் விரதங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லேசானது முதல் மிதமான மழை
கன்னியாகுமரி
புதுவை
காரைக்கால்
நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
திண்டுக்கல்
மற்றும் உள் மாவட்டங்களில்

9ஆம் தேதி வரை மழை

வரும் 9ஆம் தேதி வரை நிறைய மாவட்டங்களில் அதாவது புதுவை காரைக்கால் போன்ற பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது இதை வரும் அக்டோபர் 9ஆம் தேதியன்று இவரை நீடிக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் மழை

  1. வட மாவட்டங்கள்
  2. புதுவை
  3. காரைக்கால்

அக்டோபர் 9ஆம் தேதியன்று வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.

சென்னை பொருத்தத்தை அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும், வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன், நகரில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான அளவு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்

ஒரு தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி வரை குறிப்பிட்ட இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் இன்று முதல் 11ம் தேதி வரை எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • அந்தமான் கடல் பகுதி
  • தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள்
  • மத்தியகிழக்கு அரபிக்கடல்
  • கர்நாடக கடலோரப் பகுதி

மேலே குறிப்பிட்ட கடல் பகுதிகளில், சூறாவளி காற்றானது ஒரு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ செய்திtamilrain
ESI Chennai HomeESI Home

Leave a Reply