தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை 2022 – ஊதியம்: ரூ.71,900/-

5/5 - (1 vote)

சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது, இந்த முக்கிய அறிவிப்பின் அடிப்படையில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன என கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் 22/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
பணி2
கடைசி தேதி22/11/2022
விண்ணப்ப முறைOffiline
பணியின் பெயர்அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்

TNRD தமிழ்நாடு காலிப் பணியிடங்கள்:

இதற்கு மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு காலி இடங்களும், ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஒரு காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் வேலையை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவு வேலை – ஊதியம்: ரூ.18,536/-

ஈப்பு ஓட்டுநர் தகுதி:

ஈப்பு ஓட்டுநர் கல்வித்தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) அடிப்படையில் தமிழக அரசின் தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், அதே சமயம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்கள் ஓட்டி அமைக்க நடைமுறை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNRD வேலைக்கான வயது வரம்பு:

இந்த தமிழக ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சேலம் பணியிடத்திற்கான அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர் 01/07/2022 அன்று அடிப்படையில் வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 42 வயது கடக்காமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள விவரம் என்ன?

இந்த TNRD வேலைகளை இருக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஊதியம் வழங்கப்பட்டுள்ளது, அதில் அதிக அலுவலக உதவியாளருக்கு 15,700 முதல் 58,100 வரை வழங்கப்படும், ஈப்பு ஓட்டுநருக்கு 19,500 முதல் 71,900 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பு மூலம் தெரிய படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்த வேலையை ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம், நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அங்கு 22/11/2022 க்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அறை எண் 210, இரண்டாவது தளம் மாவட்ட ஆட்சியரகம் சேலம் 636001

Leave a Reply